districts

img

திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி

திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உடனிருந்தார். அப்போது, தண்டலச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு, மாணவ-மாணவியர்களிடம் கலந்துரையாடினர்.