திருச்சிராப்பள்ளி, மார்ச் 6 - திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல் கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத் தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டி களில் வைத்து பலர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை மாநகராட்சி, நெடுஞ் சாலைத்துறை, காவல் துறையி னர் கூட்டாக சேர்ந்து செவ்வா யன்று எவ்வித முன்னறிவிப்போ, தகவலோ இல்லாமல் திடீரென ஆக்கிரமிப்பை அகற்றுதல் என்ற பெயரில் ஜே.சி.பி. இயந்தி ரங்களை கொண்டு, கடைகள், தள்ளுவண்டிகளை அடித்து நொறுக்கி பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடுமையாக சேதப் படுத்தியுள்ளனர். ஒப்பாரிப் போராட்டம் சுப்ரமணியபுரத்தில் நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உயர்நீதிமன்ற உத்த ரவை மீறுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், வியாபாரி களை தாக்கி காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு அடை யாள அட்டை வழங்கி 14 பேர் கொண்ட விற்பனைக் குழு அமைக்க வேண்டும். திருச்சி தெப்பக்குளம், மத்திய, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் விற்ப னைக் குழு அமைக்காமல், சாலை யோர வியாபாரிகள் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புதனன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித் தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல் வன், ரேணுகா, கார்த்திகேயன், லெனின், மணிமாறன், தரைக் கடை சங்க மாவட்டச் செயலா ளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மூத்த தலை வர் துரைராஜ் ஆகியோர் பேசினர். மார்ச் 9 இல் பேச்சுவார்த்தை கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் பாஸ்கர் தலை மையில், பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த போலீசார் போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்டிஓ அருள், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் வரும் சனிக் கிழமை நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மாநகராட்சி அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவானது. இதை யடுத்து அனைவரும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.