districts

திருச்சி விரைவு செய்திகள்

லிகாய் கிளை மாநாடு

சீர்காழி, ஜூலை 3- அகில இந்திய எல்.ஐ.சி. முகவர் (லிகாய்) சங்கத்தின் சீர்காழி  முதல் கிளை மாநாடு தலைவர் ஆர்.எஸ். இளங்கோவன் தலைமை யில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  கிழக்கு கோட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். செயலாளர் கே.கேசவன் மாநாட்டு  அறிக்கையை வாசித்தார். பொருளாளர் எஸ்.பத்மநாபன் வரவு-செலவு  அறிக்கை வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி.மணி,  சிஐடியு மாவட்ட துணை செயலாளர் பி.மாரியப்பன், வளர்ச்சி அதிகாரி கள் பி.நிக்சன்சாமுவேல்ராஜ், ஏ.வி.அரவிந்தன் ஆகியோர் மாநாட்டை  வாழ்த்தி பேசினர். மாநாட்டில் அமைப்பு செயலாளராக கே.கேசவன், தலைவராக  பட்டியமேடு எஸ்.பத்மநாபன்,  செயலாளராக ஆர்.எஸ்.இளங்கோ வன், பொருளாளராக டி.முருகுபாண்டியன் உட்பட 12 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. தஞ்சை கோட்டத் தலைவர் பி.தங்க மணி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி நிறைவு செய்தார்.


தனியார் பேருந்து  கவிழ்ந்து 15 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜூலை 3 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு தனியார் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இதை தஞ்சா வூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொல்லைக்காடு பகுதி யைச் சேர்ந்த எஸ்.சரவணகுமார் ஓட்டியுள்ளார். கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்லும் அக்னி  ஆற்று பாலம் பகுதியில், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதா மல் இருக்க முயற்சி செய்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலை யோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில், இடையாத்தியைச் சேர்ந்த ஆர்.முத்துராசு, எம்.ராணி, நம்பன்பட்டியைச் சேர்ந்த ஜி.சந்திரா,  கெண்டையன்தெருவைச் சேர்ந்த நாகம்மாள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியில் சென்றோர் மற்றும் கறம்பக் குடி போலீசார் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரித்து வருகின்ற னர்.


அரசு ஊழியர் சங்க எழுச்சி நாள் கருத்தரங்கம்
புதுக்கோட்டை/கரூர், ஜூலை 3 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு எழுச்சி நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் மலர்விழி கருத்துரை வழங்கினார். கருத்தரங்கில் ‘பறிக்கப்பட்ட உரிமைகளின் வலியும், விட்டுவிடாத போராட்டங்களின் வலிமையும்’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா.ரெங்க சாமி வரவேற்க, ஆ.பழனிச்சாமி நன்றி கூறினார்.
கரூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் சங்கத்தின் கலைவாணர் கூட்டரங்கில் எழுச்சி கூட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை  வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார். சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர்கள் ஞானதம்பி, செல்வராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டச் செய லாளர் கெ.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


‘அடுத்து என்ன படிக்கலாம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஜூலை 3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் நடைபெற்ற ‘அடுத்து என்ன படிக்கலாம்’ என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சி இந்திய மருத்துவக் கழக அறந்தாங்கி கிளை தலை வர் மருத்துவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் முஜிபுர் ரஹ்மான்  வரவேற்றார். திசைகள் அமைப்பு தலைவர் மரு.தெட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்பு கள் குறித்து அரசு மருத்துவர் அசாருதீன், பொறியியல் கல்வி குறித்து  பொறியாளர் அக்ஷயா, கலை மற்றும் அறிவியல் கல்வி குறித்து பேரா சிரியர் விஸ்வநாதன், சட்டக் கல்வி வழிமுறைகள் பற்றி வழக்கறிஞர் லோகநாதன், பிசியோதெரபி இயற்கை மற்றும் உடல் மருத்துவ கல்வி  குறித்து மருத்துவர் காமராஜ், மொழிக்கல்வி குறித்து பேராவூரணி கல்லூரி பேராசிரியர் சண்முகப்பிரியா, தொழிற்கல்வி குறித்து கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் அப்துல் பாரி, பொது வேலை  வாய்ப்புகள் குறித்து பொறியாளர் கஃபார்கான், ஆசிரியர் கல்வி பணி குறித்து கீதாஞ்சலி மஞ்சன் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு மற்றும் வழிகாட்டு உரையாற்றினர். பின்னர் மேற்படிப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தனர். 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயன்பெற்றனர். ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி நன்றி கூறினார்.


ஜூலை 9 வரை ஆதார் முகாம்

 தஞ்சாவூர், ஜூலை 3-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் கோட்டத்தில் ஜூலை 4  (திங்கள்) முதல் 9 ஆம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படு கிறது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆறு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பட்டுக் கோட்டை அஞ்சல் கோட்டத்தில் அடங்கியுள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்கள், தகட்டூர், தலைஞாயிறு அக்ரஹாரம் ஆகிய இரு துணை அஞ்சல கங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஜூலை  4 (திங்கள்கிழமை) முதல் ஜூலை 9 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறுகிறது.  முகாமில், புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்து கொள்ளலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்கள் திருத்தம் செய்ய ரூ.50ம், பயோமெட்ரிக் விவ ரங்கள் திருத்தம் செய்ய ரூ.100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.  இந்த சிறப்பு முகாம் வாய்ப்பை பயன்படுத்தி, தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கார் மோதி பாட்டி - பேத்தி பலி

வேதாரண்யம், ஜூலை 3 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியில் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து சென்ற, பாத்திமா பீவி(60), அவரது பேத்தி நூரா (12) ஆகிய இருவர் மீதும் திருத்துறைப்பூண்டியை நோக்கி ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அந்தக் கார் 2 இருசக்கர வாகனங்கள் மீதும்  மோதியுள்ளது. தகவலறிந்து நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகர், டி.எஸ்.பி.  ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மருத்துவர்களுக்கு ஆட்சியர்  பாராட்டு

குடவாசல், ஜுலை 3 -  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய மருத்துவ தினத்தையொட்டி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரிகிருஷ்ணன் பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்.


 

;