districts

பழங்குடியினப் பெண்ணை காலணியால் தாக்கியவர் கைது

தஞ்சாவூர், ஏப்.24-

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி  ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. பேராவூ ரணி ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர். இவரது கணவர் சுவாமிநாதன் (56). குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில், பழங்குடியின பெண்கள் சிலர் ஞாயிறன்று பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடிப் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

   அப்போது, சுவாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் அந்தப் பெண்கள் குப்பையை சேகரித்துள்ளனர். இதை யடுத்து, அந்தப் பெண்கள் பொருட்களைத் திருடிச் செல்வ தாகக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டிய சுவாமி நாதன், அவர்கள் வைத்திருந்த பையில் உள்ள பொருட்  களை கீழே கொட்டும்படி கூறி, துறவிக்காடு கிராமம்,  எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி  போதும் பொண்ணு (23) என்பவரை காலணியால் அடித்த தாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உத்தரவுப்படி, சுவாமிநாதனை வாட்டாத்திக் கோட்டை காவல்துறையினர் காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தலிங்கம் அளித்த  புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ்  வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.