திருச்சிராப்பள்ளி/பெரபம்லூர், செப்.17 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் ஓய்வூதிய பலன்களை உடனே வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று தமிழக முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதனொரு பகுதியாக போக்குவரத்து தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்துடன் சாலையில் படுத்து புரண்டு மறியலில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ச னர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமையில், பெரம்ப லூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சாலை மறியல் நடை பெற்றது. பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகி யும் ஓய்வு கால பண பலன்களை வழங்கா மல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் தீரன் நகர் தேசிய நெடுஞ் சாலையில் 75-க்கும் மேற்பட்டோர் செவ்வா யன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் கைது செய்தனர்.