districts

வணிகர் உரிமை முழக்க மாநாடு: மண்டல ஆலோசனைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.8- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாட்டு திருச்சி மண்டல ஆலோசனை கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு திருச்சி மண்டலத் தலைவர் எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் விஇ.கோவிந்தராஜூலு விளக்கவுரையாற்றினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஏ.ஸ்ரீதர் நன்றி கூறினார். பின்னர் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டு தோறும் மே 5-ஆம் தேதி வணிகர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே 5-ஆம் தேதியன்று 40-ஆவது வணிகர் தினம் ‘‘வணிகர் உரிமை முழக்க மாநாடாக’’ ஈரோடு மாநகரில் நடைபெற உள்ளது.  ஒன்றிய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் வணிகத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி தொழில் முனைவோர்கள், பெரு வணிக பெருமக்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.  தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திரண்டு வர இருப்பதால் அதற்கேற்றவாறு அனைத்துப் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கலை பண்பாட்டை விளக்கி பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன’’ என்றார்.