அருமனை, ஜூலை 16-
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகள் வருகையால் களை கட்டியது.
குமரி மாவட்டம் அதிக சுற்றுலாத் தலங்கள் உள்ள ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் கோதையாறு வரை அனைத்து பகுதிகளிலும் கண்ணுக்கு குளுமை யான சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி தான் திற்பரப்பு நீர்வீழ்ச்சி, இந்நீர் வீழ்ச்சியில் எல்லா காலங்களிலும் நீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு உல்லாசமாக செல்கின்றனர். தற்போது விடு முறை நாட்களில் கூட்டமானது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.