districts

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனி அலுவலகம் ஒதுக்கித் தர வேண்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, மே 1 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ விலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சி.நல்லமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொரு ளாளர் நாகராஜன், மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலா ளர் ஜெயராமன், பொருளாளர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் ச.பாரி பேசினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனை வருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசா ணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் கொண்டு வர வேண்டும். முழு சுகாதார திட்ட வட்டார மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டமைக்கப் பட்ட பணியிடங்கள், அலுவலக உதவியா ளர்கள், பதிவறை எழுத்தர், இளநிலை உதவி யாளர், பணி மேற்பார்வையாளர் என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்களுக்கு ஊராட்சியில் தனி அலுவலகம் ஒதுக்கித் தர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 28  தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட் டன.  மாவட்ட துணைத்தலைவர் தலைவர்கள்,  இணைச் செயலாளர்கள், மாவட்ட தணிக் கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில்  வட்டார தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

;