districts

img

பெல் தொழிற்சாலையைப் பாதுகாக்க சிஐடியு சங்கம் வெற்றி பெற வேண்டும் வாயிற் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 19 - பெல் தொழிற்சாலையை தலை முறைகளைக் கடந்து பாதுகாக்க, தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு சங்கத்தை முதன்மை சங்க மாக வெற்றி பெறச் செய்ய வேண்டி யது அவசியம் என முன்னாள் எம்.பி.யும்,  பெல் சிஐடியு சங்கத் தலைவருமான டி.கே.ரெங்கராஜன் வலியுறுத்தினார். பெல் தொழிற்சாலையின் பிரதான நுழைவு வாயில் அருகே பெல் சிஐடியு சங்கத்தின் சார்பில் பொதுச் செயலர்  பிரபு தலைமையில் பெல் தொழிற்சங்கத் துக்கான அங்கீகாரத் தேர்தல் பிரச்சார வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.ரெங்கராஜன் பேசுகை யில், “கடந்த 40 ஆண்டுகளாக பெல்  தொழிலாளர்களுடன் நல்லுறவில் இருப்பது சிஐடியு சங்கம் மட்டுமே. தமிழ கத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே பெருமை சேர்க்கும் பெல் தொழிற் சாலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள் பல வற்றையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்திய பெரு மையும் சிஐடியு சங்கத்துக்கு உண்டு.  அரசியல் அடிப்படையில் வாக்களிக் காமல் தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சாலையின் பாதுகாப்பை மட்டுமே மனதில் நிறுத்தி வாக்களிக்க வேண்டும்.  இந்த வகையில் பெல் தொழிற்சாலை யும் தனியார் வசம் சென்று விடாமல் பாது காக்க வேண்டும். தற்போதே ஆர்டர்கள் பெருமளவு குறைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் தொழிற்சாலைக்கான ஆர்டர்களை அதிகரித்து, தொழிற்சாலையை விரிவு படுத்துதல், நவீனமயமாக்குதல் ஆகிய வற்றில் கவனம் செலுத்த வேண்டும். இணைப்புக் குழுவில் சிஐடியு இடம் பெற்றால் இத்தகைய திட்டங்கள் சாத்தியமாகும். பெல் தொழிற்சாலையை நம்பி யிருந்த சிறு, குறு தொழில்கள் திவாலாகி விட்டன. இதேநிலை தொடரக் கூடாது.  தொழிற்சாலையை மீட்டு, தொழிலாளர் களையும், அவர்களது அடுத்தடுத்த தலைமுறையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு சிஐடியு சங்கம்  மட்டுமே தொழிற்சங்கத் தேர்தலில்  முதன்மைச் சங்கமாகத் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்” என்றார். கூட்டத்தில் சங்க நிர்வாகி பரம சிவம், முன்னாள் பொதுச் செயலா ளர்கள் பொன்மாலா, குலசேகரன், சம்பத், சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;