districts

img

திருபுவனம் கம்பகரேஸ்வரர் குடமுழுக்கு விழா: 1008 பரத கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி

கும்பகோணம்,  ஜன.30 - கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் (சரபேஸ்வரர்) திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை ஒட்டி, 1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கக்கூடிய இக்கோயிலின் மகா கும்பாபிஷேக பெருவிழா பிப்ரவரி 2 அன்று நடைபெறுகிறது.  இந்த விழாவையொட்டி, தருமபுரம் ஆதீன கலை மையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.