அரியலூர், ஏப்.2 - அதிமுக-பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம் என்றார் சிதம்பரம் தொகுதி இந்தியா கூட்டணி வேட் பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திரு மாவளவன். அரியலூரை அடுத்த வாலாஜா நகர ஊராட்சியில், செவ்வாய்க் கிழமை அவர் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல; சங் பரிவார் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர். அதிமுக அணி வேறு, பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெற முடியாது என்பது அவர் களுக்கே தெரியும். அதிமுக-வும், பாஜக-வும் அரசியல் நாடகம் ஆடு கின்றனர். தேர்தலில் திமுக-வை விமர்ச னம் செய்யும் அதிமுகவினர், பாஜக -வை விமர்சிக்க மாட்டார்கள். மக்கள் விரோத சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டங் கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அம லாக முக்கிய காரணமாக இருந்தது அதிமுகவும், பாமகவும் தான். இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் மோடி என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று சிறுபான்மை யினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கும் எதிரான கட்சியான பாஜக வுடன் இணைந்துள்ளார். சமூக நீதியை பாதுகாக்கவே திமுகவுடன் விசிக கூட்டணி. எந்த நெருக்கடிகள் வந்தாலும் எங்களது கூட்டணி தொட ரும்” என்று கூறி பானை சின்னத் துக்கு வாக்குச் சேகரித்தார். பிரச்சாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் சட்டப் பேரவை உறுப்பி னர் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சங்கர், இளைஞ ரணி அமைப்பாளர் தெய்வ.இளைய ராஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்டச் செயலாளர் இளங் கோவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியி னர் கலந்து கொண்டனர்.