மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் பழுதடைந்து காணப்படும் தியாகி.வள்ளி யம்மை நினைவு மண்டபம் எப் போது சீரமைக்கப்படும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். தியாகி தில்லையாடி வள்ளியம் மையின் நினைவாக கடந்த 1971 இல் அப்போதைய திமுக அரசு கட்டிய நினைவு மண்டபம் சேத மடைந்து மிகவும் மோசமான நிலை யில் உள்ளது. இந்த நினைவு மண்ட பத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இம்மண்டபத்தை புன ரமைக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தும், இதுவரை எந்த வித பணியும் துவங்கவில்லை. பிப்ர வரி 22 அன்று தில்லையாடி வள்ளி யம்மையின் 110 ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதற்குள் நினைவு மண்டபம் சீர மைக்கப்படுமா என கேள்வி எழுந் துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும், இந்தியர்களின் உரி மைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக வும் காந்தியடிகள் 1913இல் நடத்திய போராட்டத்தில் பங் கேற்று, ஆங்கிலேய அரசின் அடக் குமுறைக்கு ஆளாகி, சிறைக் கொடுமையை அனுபவித்து நோய்வாய்ப்பட்டு 16 வயதிலேயே உயிர்நீத்தார் தியாகி.தில்லையாடி வள்ளியம்மை. தனது தாயாரான மங்களத்தம்மாளின் சொந்த ஊரான தில்லையாடியே, வள்ளி யம்மையின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுகிறது. வள்ளியம்மையின் நினை வாக தென்னாப்பிரிக்கா ஜோ ஹன்னஸ்பர்க்கில் தமிழர்கள் நினைவாலயம் ஒன்றை கட்டி, 1914 ஜூலை15 இல் காந்தியடிகள் அதை திறந்து வைத்தார். காந்தி யடிகள் தில்லையாடி வந்தபோது, அவர் அமர்ந்த இடத்தில் காந்தி யடிகள் நினைவாக தூண் ஒன்றை யும், தியாகி வள்ளியம்மையின் நினைவை போற்றும் விதமாக அதற்கு எதிரே ஒரு மணிமண்ட பத்தையும் கட்டி 1971 இல் திறந்து வைத்தார் அப்போதைய முதல் வர் கருணாநிதி.
அந்த நினைவாலயத்தில் காந்தி யடிகளுக்கு தமிழைக் கற்று தந்த தில்லையாடி வேதியம் பிள்ளைக்கு காந்தி எழுதிய தமிழி லான கடிதங்கள், தில்லையாடி யிலிருந்து, தென்னாப்பிரிக்கா விலிருந்து நாடு கடத்தப்பட்ட வர்கள் சென்னை வந்தபோது எடுத்த புகைப்படங்கள், காந்தி யுடன் அங்கு உறுதுணையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர் களின் படங்கள், காந்தியடிகளின் இளமைக்கால சிலை, பெரிய அள விலான வரலாற்று ஓவியங்கள் புகைப்படம், தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் இந்தியர்கள் நடத்திய சாத்வீக போராட்ட புகைப்படம், ட்ரான்ஸ்வால் அணிவகுப்பு உள்ளிட்ட வரலாற்றை சுமந்து நிற்கும் படங்கள் என ஏராள மானவை இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் அவை முறையான பராமரிப்பின்றி உள்ளன. காந்திய டிகளின் சிலையில் தலை, புகைப் படங்கள், ஓவியங்களெல்லாம் சேதமடைந்து காணப்படுகின்றன. மணிமண்டபத்தின் கதவு, ஜன் னல்கள் உடைந்தும், சுவர்கள் விரிச லடைந்தும் அதில் மரங்கள் முளைத் தும் காட்சியளிக்கிறது இந்த மணி மண்டபம். சுற்றுலா பயணிகளின் தேவைக்காக அமைக்கப்பட்ட கழிப் பறை கட்டிடம் எப்போது இடிந்து தலையில் விழுமோ என்ற நிலை யில் உள்ளது. சுற்றுச்சுவர்கள் உடைந்து விட்டதால், இரவு நேரங் களில் சமூக விரோதிகளின் மண்ட பமாக மாறி வருகிறது.
தியாகி.வள்ளியம்மையின் நினைவு தினமான பிப்ரவரி 22 அன்று மட்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்துவிட்டு செல்வதாகவும், அதன்பிறகு கண்டுகொள்வதே இல்லையென வும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காந்தி அமர்ந்த இடத்தில் உள்ள நினைவு தூணும் கேட்பாரற்று உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மணி மண்டபத்தை சீரமைத்து பாது காக்கவில்லையென்றும், தற்போ தைய திமுக அரசு விரைவில் சீர மைப்பதாக அவ்வப்போது கூறி னாலும், இதுவரை எந்தவித நடவ டிக்கையும் இல்லை. தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்ட பத்தை புதிதாக கட்டுவதோடு, அவர் குறித்த கூடுதல் வரலாற்று தகவலை காட்சிப்படுத்திடவும், காந்தியடிகள்-தில்லையாடி வரு கையை வரலாற்றுப் பதிவாக்க வும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வள்ளியம்மையின் நினைவு மண்டபத்தை பாதுகாத்து பரா மரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம் பாடி ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வள்ளியம்மையின் நினைவு தினத்தை அரசு விழாவாக கடைப் பிடிக்க வேண்டுமென ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டங்க ளில் தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறோம். திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தியாகி வள்ளியம்மையின் நினைவு மண்டபத்தை உடனடியாக புன ரமைப்பதோடு, அவரது நினைவு நாளை அரசு விழாவாக கடைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.