ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.1- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலுக்கு சொந்த மான குளங்கள் நகர் பகுதி யில் உள்ளன. அவற்றில் நகராட்சி அலுவலகம் நம்பி நாயுடு தெருவையொட்டி சக்கரைக்குளம் உள்ளது. திருமுக்குளம் நீர் நிரம்பி 2 குளங்கள் வழியாக கடை சியாக சர்க்கரை குளத்தை அடைகிறது. அதன்பின்பு நீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்நிலையில் சர்க்கரை குளத்தில் நீர் நிரம் பால் சுற்றுச்சுவர்கள் சேதம டைந்த நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் ரூ.45 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட் டப்பட்டு குளத்தில் இருந்த அசுத்தமான நீர் வெளியேற் றப்பட்டது. தற்போது சில மாதங்களிலேயே குளத்தில் உள்ள நீர் மாசடைந்து பச்சை நிறத்தோடு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து 29வது வார்டு உறுப்பினர் மீரா தன லட்சுமி முருகன் கூறுகை யில், என்னுடைய வார்டுக்கு உட்பட்ட சக்கரை குளம் சுற்றுச்சுவர் சேதமடைந்து பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணனிடம் முறை யிட்டதின் பேரில் ரூ.45 லட்சம் செலவில் நீரை வெளியேற்றி சுற்றுச்சுவர் எழுப்பி கோவில் ர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் மீண்டும் தண்ணீர் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் குளத்திலிருந்து நீர் வெளியேற்றுவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. எனவே போர்க்கால அடிப் படையில் திருக்கோவில் நிர்வாகம் தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஸ்ரீவில்லி புத்தூர் நகர்குழு உறுப்பின ரும் 29 ஆவது வார்டில் வசிப்பவருமான இசைக் கனி நகர நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் விரை ந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று கூறினார்.