திருச்சிராப்பள்ளி, செப்.3 - ‘உங்கள் தோழன் அறக்கட்டளை’ சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி தென்னூர் பகுதியில் ஞாயிறன்று நடந்தது. மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல், ரத்தம், கண், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. முகாமில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.