districts

img

பொருந்தலூர் மக்களின் பல ஆண்டு போராட்டம் வெற்றி

கரூர், அக்.4 - பொருந்தலூர் மக்களின் பல  ஆண்டு கோரிக்கையை நிறை வேற்றித் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினருக்கு அப்பகுதி மக்கள்  பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ள னர். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், பொருந்தலூர் ஊராட்சிக் குட்பட்ட கிராமத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்த வர்களை எரிப்பதற்கும் புதைப்பதற் கும் அரசுக்கு சொந்தமான 33 செண்டு  நிலம் உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு  இறந்தவர்களை கொண்டு செல்வ தற்கு நிரந்தர பாதை இல்லாததால்,  பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்தது டன், திறந்தவெளியில் இறந்தவர்கள் உடலை எரித்து வந்தனர். மழைக் காலங்களில் உடல்களை எரிக்க முடி யாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கினர். இதுகுறித்து அன்றைய அதிமுக ஆட்சியின் தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொருந்தலூர் கிளை சார்பில் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், பொது மக்களை திரட்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.சக்திவேல், கிளைச் செயலா ளர் பெரியசாமி தொடர்ந்து பங்கேற்ற னர். ஆனால் தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், எந்தவித நடவ டிக்கையும் எடுக்காமல் கோரிக்கை களை கிடப்பில் போட்டது. இதைக்  கண்டித்து, கட்சி சார்பில் தோகை மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது.  பின்னர் நடைபெற்ற சுமூக  பேச்சு வார்த்தையில், கோரிக்கை களை ஏற்பதாக அரசு அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால் பேச்சு வார்த்தையில் உறுதியளித்தபடி நடந்து கொள்ளாமல், தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கோரிக் கைகளை மீண்டும் கிடப்பில் போட்டது.

ஆட்சியர் நடவடிக்கை 

கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் மனு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மனுவை பெற்றுக்கொண்டு  நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவ லர்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும், சுடுகாட்டில் எரியூட்டும்  பகுதியையும் நேரில் ஆய்வு மேற் கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். 10 செண்டு நிலம் தானம் இதனையடுத்து, சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையில் அதே ஊரைச் சேர்ந்த சங்கிலிமுத்து என்பவருக்குச் சொந்தமான 10 செண்டு நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள் சங்கிலிமுத்துவின் குடும்பத்தினரிடம், ‘மக்களின் நலனுக்காக அந்த 10  செண்டு நிலத்தை வழங்கிட’ கோரிக்கை விடுத்தனர். சங்கிலி முத்து இக்கோரிக்கையை ஏற்று, சுடு காட்டிற்குப் பாதை அமைக்க தனது 10 செண்டு நிலத்தை, அரசுக்கு தான மாக வழங்கினார்.

அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முக்கிய கோரிக்கையான, ‘சுடு காட்டில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு எரிமேடை மற்றும் மேற் கூரை கட்டி கொடுக்க வேண்டும்’ என்பதை பொருந்தலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏற்று, உடனடியாக அதற்கு நிதியை ஒதுக்கீடு செய்தார்.  தொடர்ந்து, மேற்கூரையுடன் கூடிய எரிமேடை கட்டுமானப் பணி களை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும்  சுற்றுச்சுவர், தண்ணீர் மற்றும் மின்  விளக்குகள் வசதியும் ஊராட்சி மன்றம்  சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.  பாராட்டும் நன்றியும் ஏழை-எளிய மக்கள், தொழி லாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முன்நின்று, அவர்களின் கோரிக்கை களை தொடர் போராட்டத்தின் மூலம்  வென்றெடுக்கிறது. எங்களுக்கு துணையாக நின்று, எங்களது பல ஆண்டு கால கோரிக்கை யையும், உரிமையையும் மீட்டெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம் என்றனர் அப்பகுதி மக்கள்.