districts

img

சிலிண்டருக்கான முழுத் தொகையையும் அரசே வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, செப்.26 - சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும். இல்லை என்றால் வரு டத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கு முன்பு உள்ளூர்  இடம் மாறுதல் மற்றும் மாவட்ட இடமாறு தல்களை உடனடியாக வழங்க வேண்டும். மூன்று வருடம் பணி முடித்த மினி அங்கன் வாடி ஊழியர்களை எந்தவித நிபந்தனை யும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.  ஐந்து வருடம் பணி முடித்த உதவியாளர் களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். செல்போன் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்து, அவை பழு தடைந்துள்ள. எனவே புதிய செல்போன் உட னடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே மினி மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 1995-ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். திட்ட பணி தவிர பிற துறை பணிகளை  திணிப்பதை கைவிட வேண்டும். 15 குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உணவிற்கான செலவு களை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திங்களன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பேபி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.லதா முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், மாவட்டச்  செயலாளர் ப.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.கலைச்செல்வன், ஆர்.இராமானுஜம் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை  மாவட்டத் தலைவர் பேபி, மாவட்ட ஆட்சியரி டம் வழங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.பரமேஸ்வரி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பரிமளா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் கே.அனுசுயா முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.பழனியம்மாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி,  அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொ டங்கி வைத்து மாவட்ட செயலாளர் டி.பத்மா பேசினார். சங்கத்தின் மாநில பொருளாளர் தேவமணி நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் கே.லதா நன்றி கூறி னார்.
கரூர்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலிண்டர்களை வரிசையாக வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.சாந்தி, சிஐடியு மாவட்ட  தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முரு கேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம், தள்ளு வண்டி தரைக்கடை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, சிஐடியு மாவட்ட  பொருளாளர் ப.சரவணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.தனபாக்கியம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். மாவட்ட பொருளாளர் கே.கலா நன்றி கூறி னார்.

;