தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப் பால் வார விழா நடைபெற்றது. சக்கராப் பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவிற்கு டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் 40 தாய்மார்களுக்கு ரூ.400 மதிப்பிலான சத்துமாவு, பேரீச்சம்பழம், பிரட் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.