தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை சின்னக் கடைத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவரை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா புத்தகப் பைகளை வழங்கினார்.