நாகப்பட்டினம், மே 17-
நாகப்பட்டினம் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச் சர் ஐ.பெரியசாமி, கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அரசு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர். மக்கள் பயன் பாட்டிற்காக அரசு கட்டடங்க ளைத் திறந்து வைத்தனர்.
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக் குவளை ஊராட்சியில் உள்ள சமத்துவ புரத்தில் நடை பெற்று வரும் பணிகளை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் நாகை. மாலி ஆகியோர் ஆய்வு செய்த னர். பின்னர் அதே பகுதியில் உள்ள நியாயவிலை அங் காடியை மக்கள் பயன்பாட் டிற்காக திறந்து வைத்த னர். இந்நிகழ்வில் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், ஆதிதிராவிடர் நலத்துறைத் தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.