அரியலூர், அக்.17 - அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு. சின்னப்பா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.65 லட்சத்தில் நவீன தானியங்கி சலவை இயந்தி ரத்தை வழங்கினார். மேலும், அதனை இயக்கி வைத்து இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு தூய்மையை பேணுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதன்மை யர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.