districts

img

இல்லம் தேடி கல்வி மையத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மாணவர்கள்

தஞ்சாவூர், டிச.4 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் முடச்சிக்காடு ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில், “இல்லம் தேடி கல்வி  மையத்தை” சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார் திறந்து வைத்தார்.  சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், துணைத்தலைவர் முத்து லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி  அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இல்லம் தேடி கல்வி மையத்தில் பயிலும் மாண வர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்பு கள் வழங்கி, மேளதாளத்து டன் ஊர்வலமாக மையத் திற்கு அழைத்து வரப்பட்டு கலந்து கொண்டனர். ஏற்பாடு களை பள்ளி தலைமையாசிரி யர் அமிர்தவள்ளி செய்தி ருந்தார்.