districts

img

பேராவூரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஜூன்.27 -  போதையில்லா தமிழ கத்தை வலியுறுத்தி பேரா வூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்பு ணர்வு பேரணி மற்றும் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் அருகே தொடங்கிய பேர ணியை கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கடை வீதி வழியாக சென்ற பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.  பேரணியில் போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக் கங்கள் எழுப்பியவாறு சென்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் பேசுகையில், “போதைப்பொருட்க ளினால் சமுதாயம் கெடு கிறது. மாணவர்கள் விழிப்பு ணர்வுடன் இருந்தால் போ தையில்லா தமிழகத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.  நல்ல நண்பர்களை தேர்ந்தெ டுத்து பழகுங்கள். போதைப் பொருள் விற்பனை குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிந்தால், தயக்கமின்றி காவல் நிலையத்தில் தக வல் தெரிவியுங்கள். உங்க ளது ரகசியம் பாதுகாக்கப் படும். அனைவரும் ஒன்றி ணைந்தால் போதையில்லா தமிழகம் சாத்தியம்” என்று பேசினார்.  இக்கூட்டத்தில் பேரா வூரணி காவல் ஆய்வாளர் பசுபதி சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவ லர் ராமலிங்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கி ணைப்பாளர் சர்வம் சரவ ணன் மற்றும் பலர் பங்கேற்ற னர்.