districts

img

பாடப் புத்தகங்களில் மதவாதக் கருத்துகள்: மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 23 -  என்சிஆர்டி கொண்டு வந்துள்ள புதிய 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து, பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. வேதங் கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரிகம் என்ப தற்கு பதிலாக சிந்து - சரஸ்வதி நாகரிகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்வி திட்ட வடிவமைப்பின்படி இந்த மாற்றங்கள் நடை பெற்றுள்ளன.  இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம்  சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பிரேம் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் அர்ஜுன் கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் சந்துரு போராட்டத்தை  நிறைவு செய்து பேசினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.