districts

img

நீட் தேர்வு: மணப்பாறையில் மாணவி பலி; சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கைப்பட்டியில் ஒரு மாணவி இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், ரேங்க் அடிப்படையில் தனக்கு இடம் கிடைக்காததால் கடந்த ஜூன் 13 அன்று உயிரை மாய்த்துக் கொண்டார். 

அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டக் குழு சார்பில் சனிக்கிழமை மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் கண்டன உரையாற்றினார். 

வட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

;