districts

img

தரைக்கடை வியாபாரத்திற்கு அனுமதி கோரி நெறிக்குறவர் இன பெண்கள் குடும்பத்துடன் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்,26- திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் பல ஆண்டுகளாக ஊசி, பாசி விற்று பிழைக்கும் பழங்குடி யின நரிக்குற பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும் கோட்டை காவல் துறையை கண்டித்தும், 2014 தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி வியா பாரம் செய்யும் உரிமை யை நிலைநாட்ட வலியு றுத்தியும் பழங்குடி இன நெறிக்குறவ பெண்கள் மற்றும் தரைக்கடை - தள்ளு வண்டி வியாபாரிகள் சத்தி ரம் பேருந்து நிலையம் அரு கில் உள்ள மாநகராட்சி இள நிலை பொறியாளர் அலு வலக வளாகத்தில் வியாழ னன்று குடும்பத்துடன் காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலை மை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சங்க மாவட்ட பொ ருளாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அதி காரிகள், கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில்,  இரண்டு நாட்கள் கால அவ காசம் கேட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.