தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி மாதாகோயில் தெருவில் மின் வாரிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6,63,510 மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வியாழனன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதேபோன்று கோயில் தேவராயன் பேட்டையில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.