பெரம்பலூர், செப்.1 - பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 9 ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித் தார். பள்ளி முதல்வர்கள் தீபா, சந்திரோ தயம் வரவேற்றனர். பெரம்பலூர் காவல் துறை கண்காணிப்பாளர் பழனிசாமி, சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், இஸ்ரோவின் மூன்றாவது நிலவுப் பயணமான சந்திர யான்-3 இன் மாதிரி வடிவம் அமைக் கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி ரமே சுடன், காணொளி வாயிலாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரை யாடல் நடத்தினர். பெரம்பலூர் ஆய்வா ளர் சக்திவேல், மேடைப் பேச்சாளர் கயல்விழி, பள்ளியின் பங்குதாரர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். லெஸீம் டிரில், கோகனெட் டிரில், பரீகேண்ட் டிரில், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் பெற்றோர்களுக் கான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப் பட்டன. பள்ளி மாணவிகள் நன்றி கூறினர்.