districts

img

சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா

புதுக்கோட்டை, அக்.25 - தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா புதுக்கோட்டையில் வியா ழக்கிழமை நடைபெற்றது.  கண்காட்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரி விக்கையில், “சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மற்றும்  விளிம்புநிலை மக்களுக்கு  நிலையான ஆரோக்கி யத்தைப் பேணும் வகையில் உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்கள், கீரை வகை கள், காய்கறிகள் மற்றும்  பழங்களை கொண்ட சரி விகித உணவை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்” என்றார். மேலும், சிறுதானி யங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் இரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த மாவட்ட அளவிலான உணவு மற்றும்  ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  திட்ட இயக்குநர் (மக ளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட மேலாளர் (தாட்கோ)  எல்.அனிட் லிமலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.