districts

img

தஞ்சை மாவட்டத்தில் 162 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் புதிதாக உருவாக்கம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், ஆக.28 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் 162 பால்  உற்பத்தியாளர்கள் சங்கங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.  தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) புதன்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் மாநாட்டில் அவர் மேலும் பேசிய தாவது: மாவட்டத்தில் நெல், தென்னை, கரும்பு போன்றவை சாகுபடி செய்யும்  விவசாயிகள் மதிப்புக் கூட்டும் பொருள் கள் தயாரிப்பது குறித்து யோசிக்க வில்லை. சாகுபடி பணிகளில் மட்டு மல்லாமல், மதிப்புக் கூட்டும் பொருள் கள் தயாரிப்பது, சந்தையிடுதல் போன்ற வற்றையும் விவசாயிகள் சிந்திக்க வேண்டும். மாவட்டத்தில், 490 கிராமங்களில் பால் உற்பத்தியாளர் சங்கம் கிடை யாது. இது தொடர்பாக சிறப்பு முயற்சி  எடுத்து, சுய உதவிக் குழுக்கள் மூலம்  இரு வாரங்களில் 162 ஆவின் பால்  உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இச்சங்கங்களைப் பதிவு செய்யும் பணி இந்த வாரத்தில் முடி வடைந்துவிடும். இதன் மூலம், மாவட்டத்தில் 20 ஆயிரம் லிட்டர் பால்  உற்பத்தி அதிகரிக்கவுள்ளது. கூடுத லாக உற்பத்தி செய்யப்படும் பாலை  வைத்து மதிப்புக் கூட்டும் பொருள்கள் தயாரிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மாவட்டத்தில் நிறைய இடங்க ளில் உள்நாட்டு மீன் உற்பத்தி செய்யப் படுகிறது. ஆனால், மீன்களை வளர்த்து,  இடைத்தரகர்களிடம் வழங்கப்படு வதால், அவர்கள்தான் பயனடைந்து வருகின்றனர். இது தொடர்பாக மீன் உற்பத்தியாளர்களைக் குழுவாக அமைத்து மதிப்புக் கூட்டும் பொருள் கள் தயாரிக்கலாம். தென்னை சாகுபடி அதிகமாக உள்ள பேராவூரணியில், தென்னை நார்  தொடர்பான தொழில்களை உரு வாக்குவதற்காக தொழில் துறை அமைச் சர் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி யுள்ளார். இதன் மூலம் பலன்களைப் பெற விவசாயிகள் முன் வர வேண்டும்.  நிப்டெமில் தஞ்சாவூர் மாவட்ட விவசா யிகளுக்கு மதிப்புக் கூட்டும் பொருள் கள் தயாரிப்பு தொடர்பாக நிறைய பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டுறவு சங்கங்களில்  தேங்காய் எண்ணெய் விற்பனை

தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி பேசுகையில், “தேங்காய் எண்ணெய்யைத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை  செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தென்னை விவசாயி கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சரிடம் கூறியபோது, தேங்காய்  எண்ணெய்யை அதிகமாகப் பயன்படுத்தும் கோவை மாவட்டம், பொள்ளாச்சியி லுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்ய முடிவு  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி யையும் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்” என்றார். நிப்டெம் இயக்குநர் வி.பழனிமுத்து, தமிழ்நாடு ஸ்டார்ட் அப் துணைத் தலைவர்  சிவக்குமார் பழனிசாமி ஆகியோர் பேசினர். முன்னதாக, முனைவர் வி.ஆர். சினிஜா வரவேற்றார். ஸ்டார்ட் அப் தஞ்சாவூர் மண்டலத் திட்டத் தலைவர் பி. கருப் பண்ணன் நன்றி கூறினார்.