districts

img

மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி

அரியலூரில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 15, 17, 25 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரதான சாலை வழியாக டால்மியா சிமெண்ட் ஆலை வரை ஓட்டினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.