திருத்துறைப்பூண்டி, ஜூலை 8 -
மேகதாது அணை கட்ட ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனுமதி கோரிய கர்நாடக துணை முதல்வரை கண்டித்தும், ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை உடனே அகற்ற கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் விளக்குடி கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் ஆர்.அன்பழகன், கிளைத் தலைவர் வி.ஆறுமுகம், விச நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர் சி.உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.வடிவேல், விதொச ஒன்றிய பொறுப்பா ளர்கள் துரைராஜ், நடராஜன், சிபிஎம் கிளைச் செயலாளர் கே.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலை யம், நெடும்பலம், பிச்சன்கோட்டகம், பாமணி, பழையங்குடி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.