districts

img

சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கம்

மயிலாடுதுறை, பிப்.22-  மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களின் 17 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் செவ்வாயன்று நடைபெற்றது.  இலுப்பூரில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையிலும், திருக்கடையூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலைமையிலும், காட்டுச்சேரியில் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. நாகப்பட்டினம்  நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இயக்கத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஜீவாராமன், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.