தஞ்சாவூர், பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனை, செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆவணம் டாக்டர் கலாம் பாலி டெக்னிக் கல்லூரி இணைந்து, தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின. முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.மதிவாணன், பார்மசி கல்லூரி முதல்வர் என்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக் கோட்டை அரசுமருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பி.சீனிவாசன் தலைமையில் மருத்துவக் குழுவினர், 25 மாணவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.