districts

இராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி அறந்தாங்கியில் பிரச்சாரம்

அறந்தாங்கி, ஏப்.1- இந்தியா கூட்டணி சார்பாக இராம நாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  வேட்பாளர் நவாஸ் கனி ஏணி சின்னத் தில் போட்டியிடுகிறார். இவர், புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த  பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணி கட்சி யின் திமுக உறுப்பினர் உதயம் சண் முகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் செங்கோடன், விடுதலை சிறுத்தை கள், காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.