districts

img

பொதுத் திடலில் தேங்கிக் கிடக்கும் மழைநீர்

தஞ்சாவூர், டிச.8-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செந்தலைப்பட்டினம் ஊராட்சி யில், பள்ளிவாசல் எதிரில், பொதுப் பயன் பாட்டிற்காக ஊராட்சிக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த இடத்தில் பொதுக் கூட்டங்கள், பள்ளிவாசல் சம்பந்தமான கூட்டங்கள், நிகழ்ச்சி கள், அரசு சம்பந்தமான கூட்டம், மருத்துவ முகாம் போன்ற பொது நிகழ்ச்சிகள் நடைபெறு வது வழக்கம்.  தற்போது ஊரில் உள்ள மாடுகள் பராமரிப்பின்றி விடப்படு வதால் இந்த திடலில் ஓய்வெ டுக்கின்றன. இதனால் திடல் முழுவதும் மாட்டுச் சாணம் நிறைந்து கிடக்கிறது. தற்போது மழை காலமாக இருப்பதால், இங்கு தண்ணீர் தேங்கி துர்நாற் றம் வீசுகிறது. போதிய வடிகால் வசதி இல்லை. இவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இத்திடலுக்கு உரிய வடிகால் வசதி செய்து, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.