districts

img

மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஆர்.பாலகிருஷ்ணன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய 11 ஆவது மாநாடு ஞாயிறன்று சமயபுரத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் சேகர், ஜெயராணி ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் குணசேகரன் ஏற்றி னார்.  சமயபுரம் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். சமயபுரம் பேரூ ராட்சியில் நடைபெறும் பணி களுக்கு விடப்படும் காண்ட் ராக்ட்களை முறையாக விட  வேண்டும். ரூ.4 லட்சம் மதிப் பில் துவங்கப்பட்ட குளத்திற் கான பணிக் காலம் முடிந்தும் பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மகாளிக்குடி சுடு காட்டை சரி செய்து சாலை  அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாள ராக ஆர்.பாலகிருஷ்ணன் உள்பட 11 பேர் கொண்ட  ஒன்றியக் குழு தேர்வு செய் யப்பட்டது. புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் நிறைவுரையாற்றினார். ஜோதிபாசு நன்றி கூறினார்.