districts

img

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை, டிச.4 - புதுக்கோட்டை பச்சை பூமி அமைப்பின் தலைவர் கவிஞர்  வேங்கை ஆரோனின் 10 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.  விழாவுக்கு திருச்சி தனிநாயகம் அடிகள் ஆய்வு நிறுவன  இயக்குநர் அமுதன் அடிகள் தலைமை வகித்தார். வீணைக்கு வெட்கம், எள்ளு வயல் பூக்களே, மணம் கமழும்  திருமறைகள் ஆகிய நூல்களை அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறைத் தலைவர் ஜெயகாந்தன் வெளி யிட்டார். காதல் முதலீடு, நேரம் நம் கையில், ஆலி, வேங்கை ஆரோ னின் கவிதைகள் ஆகிய நூல்களை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட்டார். இரவின் கதறல், ஒரு புயலின் நாதம்,  உறைந்த கனவுகள் ஆகிய நூல்களை தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். முன்னாள் சட்டப்பேரவை கவிச்சுடர் கவிதைப்பித்தன் சிறப்புரையாற்றினார். முன்னதாக கவிஞர் ஆண்டனி வர வேற்றார். கவிஞர் மு.கீதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னார். நூலாசிரியர் கவிஞர் வேங்கை ஆரோன் ஏற்புரை யாற்றினார்.