districts

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு பி.காம் பாடப்பிரிவில் போட்டி கடுமையாக இருக்கும்

மதுரை, மே 9-

     நான்கு முக்கிய பாடங்களில் அதிக  மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ள தால் வணிகவியல் பாடப்பிரிவில் போட்டி  கடுமையாக இருக்கும். கல்லூரிகளில் பி.காம் மற்றும் அது சார்ந்த பாடங்க ளுக்கு அதிக கட்-ஆஃப் இருக்கும். என்கின்  றனர் கல்வியாளர்கள்.

    வணிகவியலில் 5,678 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், கணக்குப் பதி வியல்- 6,573,  வணிகக் கணிதம்-1,334,  பொரு ளியல்- 1,760, கணினி பயன்பாடு- 4,051 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்,

   வணிகவியல் பாடப்பிரிவுகளில் கட்  ஆஃப் அதிகம் விரும்பப்படும். சில கல்லூரி களில் 100-க்கு 100 ஆகக் கூட இருக்கலாம். அல்லது கட்-ஆப் 97-98 சதவீமாக இருக்க லாம். பி.காம் படிப்புக்கான  கட் ஆப் 96 சத வீதத்திற்குக் குறையாது என்கின்றனர் கல்வியாளர்கள்

 .  வேதியியல் மற்றும் உயிரியலில் கணிசமான மாணவர்கள் முழு மதிப்பெண்  பெற்றுள்ளனர். முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகள், மீன்வள அறிவியல், கால்நடை அறிவியல் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான கட்-ஆஃப் அதிகரிக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

   கணிதம், இயற்பியல் மற்றும் வேதி யியலுக்கான சிபிஎஸ்இ வினாத்தாள்கள் சவாலாக இருந்ததால், பொறியியல் சேர்க்கையில் சிபிஎஸ்இ மாணவர்களை விட மாநிலக் கல்வியில் பயின்ற  மாண வர்கள் முன்னணியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.