தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு, கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், இரண்டு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் என்.பி.ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் கண.குமார், பொருளாளர் ஆவி.ரவி முன்னிலை வகித்தனர். வீரியங்கோட்டை லதா கண்ணன் சக்கர நாற்காலிகளை அரசு தலைமை மருத்துவர் காமேஸ்வரியிடம் வழங்கினார்.