தஞ்சாவூர், அக்.21 - பாலஸ்தீன மக்கள் மீதான, இஸ்ரேல் அரசின் இன அழிப்பு நடவ டிக்கையைக் கண்டித்து போர் எதிர்ப்பு முழக்கப் போராட்டம், தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில், தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் எச்.அப்துல் நசீர் தலைமை வகித் தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில் குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். நிறை வாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரச் செயலாளர் எம்.கோஸ் கனி நன்றி கூறினார். போர் எதிர்ப்பு முழக்கப் போராட் டத்தில் இஸ்ரேல் அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும்; இஸ்ரேல் நடத்தும் போருக்கு அமெரிக்க அரசு துணை போகக்கூடாது; அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.