districts

img

கேசரப்பட்டி அஞ்சலகத்தில் ரூ.40 லட்சம் கையாடல்: அஞ்சல்துறை அதிகாரிகளை கண்டித்து மக்கள் ஆவேச போராட்டம்

பொன்னமராவதி,ஜன.2- புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதி அருகே கேசரப்பட்டியில் அஞ்சல கத்தில் நாற்பது லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், மிரட்டும் அஞ்சல் துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னமராவதி வலையபட்டி அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடு பட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள கேச ரப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய கூலி தொழிலாளர்கள்   சேமிப்பு திட்டம், நிரந்தர வைப்பு நிதி, செல்வமகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு பணியாற்றிய கிளை அலுவலர் ராஜேஷ் என்பவர் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் ரூ.40 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை அவர்களது கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார்.  இதையறிந்த பொதுமக்கள் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்ணீருடன் போராட்டம் நடத்தினர். இந்த செய்தி தீக்கதிர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட பொது மக்களின் பணம் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்காத அஞ்சல் துறை அதிகாரிகள்,’போராட்டம் நடத்தி னால்” பணம் கிடைக்காது என பொது மக்களை மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் உடனடியாக பணத்தை திரும்பத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டியாநத்தம்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகேசன் தலை மையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி வலையபட்டி தபால் அலுவலகம் முன்பாக ஆவேசமாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  நல்லதம்பி, குமார், பாண்டியன், ராமசாமி,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பழனியப்பன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஏனாதி ஏஎல்.ராசு,போதுமணி உள்பட பலர்  பங்கேற்றனர். ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது.