அரியலூர், ஜன.17 - பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட ஹாக்கி இந்தியா சங்கம், பசுபதி ஹாக்கிக் கழகம் இணைந்து 16 ஆம் ஆண்டு ஹாக்கிப் போட்டியை செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தின. போட்டியில் 10 அணிகள் பங்கேற் றன. இதில் பசுபதி நினைவு ஹாக்கி கழகம் முதலிடத்தையும், மான்போர்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் ஹாக்கி அணி 2 ஆம் இடத்தையும், மாவட்ட ஹாக்கி அகாடமி அணி 3 ஆம் இடத்தை யும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அலுவலர் லெனின், ஹாக்கி இந்தியா சங்க மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கூடைப் பந்தாட்ட கழகத் தலைவர் பூமிநாதன், எருத்துக்காரன் பட்டி ஊராட்சித் தலை வர் சிவா(எ)பரமசிவம், முன்னாள் இந்தியா ஹாக்கி அணி வீரர்கள் ரஜினி, சம்பத் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.