districts

அதிக வாடகை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜன.23 - மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்  அறுவடை செய்யும் இயந்திரங்களுக் கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், வேளாண்மைத் துறைக்கு சொந்தமான இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடு வதில் உள்ள குறைபாடுகளை போக்க  வேண்டுமெனவும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  கடுமையான மழை, வெள்ளம், பருவம் தவறி பெய்த கனமழை காரண மாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடவு  செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் பெரும்பாலும் அழுகி பாதிக்கப்பட்ட நிலையில், தப்பிப் பிழைத்த பயிர்க ளுக்கு கடனுக்கு உரம் வாங்கி  போட்டு காப்பாற்றினர். இந்நிலையில்  எஞ்சி நிற்கும் அந்த நெற்பயிர்களை அறு வடை செய்ய தனியார் இயந்திரங்கள் அதிக அளவில் கட்டணத்தை நிர்ண யித்து வைத்துள்ளன. இது விவசாயி கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சிம்சன் கூறுகையில், தொடர் கனமழை யில் அழிந்தது போக மிஞ்சிப் போனவை களை பெரும் பாடுபட்டு காப்பாற்றி,  தற்சமயம் அந்த பயிர்கள் அறுவ டைக்கு தயாராக இருக்கின்றன. ஆனால்  அறுவடை செய்ய வரும் தனியார் இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு 2900 ரூபாயை கண்டிப்புடன் கேட்ப தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 குறிப்பாக திருக்கடையூர், டி.மணல் மேடு, கிள்ளியூர், திருவிடைக்கழி, திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதி களில் ஏஜெண்டுகள் மூலம் வாடகைக்கு  விடப்படுகிற இயந்திரங்களின் கட்டணத் தால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். அறுவடை இயந் திரங்களுக்கான விலையை மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்வதுதான் வழக்கம். நடப்பாண்டிற்கான கட்டணத்தை ஆட்சியர் இதுவரை நிர்ணயம் செய்த தற்கான தகவல் எதுவும் வரவில்லை. வேளாண்மை துறைக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் எல்லாம் இருக்கிறதா? என்றே தெரியவில்லை. பல இடங்களில் அந்த இயந்திரங்கள் நிலங்களில் இறக்கியவுடனேயே பழு தாகி போகிற நிலையும் ஏற்படுகிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் அதை யெல்லாம் கண்டுகொள்ளாமல் தனி யார் ஏஜெண்டுகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதால் வேறு வழியின்றி தனியார் அறுவடை இயந்திரங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல் விவ சாயிகளுக்கு ஏற்படுகிறது.  எனவே உடனடியாக மாவட்ட  ஆட்சியரும், மாவட்ட வேளாண்துறை யும் உரிய நடவடிக்கை எடுத்து அறு வடை இயந்திரங்களுக்கான விலையை  நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

;