districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

புதுக்கோட்டை, செப்.26 - புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர் மாதேஸ்வரன், மாலையில் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மாதேஸ்வரனை தேடிய நிலையில், திங்கள்கிழமை இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ்நகர் காவல் நிலையத்தினர் மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே மாணவரின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் பள்ளிக்கு அருகே இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குப் பதிவு செய்து முறையாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்டோரும் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் இடைநீக்கம் செய்யப்பட்டார். திங்கள்கிழமை காலை மாணவர் மாதேஸ்வரன் பள்ளிக்கு வந்தபோது, தலை முடியை முறையாக வெட்டி வரச்சொல்லி கண்டித்து அனுப்பி வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிசி மாநிலத் தலைமை அதிகாரி 
கும்பகோணம் பட்டாலியனில் ஆய்வு

கும்பகோணம், செப்.26- என்.சி.சியின் தமிழக மாநில தலைமை அதிகாரி கமாண்டர் அதுல் குமார் ரஸ்தோகி  கும்பகோணம் 8 ஆவது என்சிசி பட்டாலியனில் ஆய்வு செய்தார்.   அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக அரங்கில் நடந்த பாராட்டு விழாவில், சாதனை படைத்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவி யர்கள், சிறந்த அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழி யர்களை பாராட்டி கௌரவித்தார். இதில், முக்கிய நிகழ்வாக அகில இந்திய அளவில்  நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று  பதக்கங்களை வென்ற கும்பகோணம் அன்னை கல்லூரி யின் இந்துஜா, கந்தர்வக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரியின் வித்யாஸ்ரீ மற்றும் மன்னார்குடி அரசு கலைக்  கல்லூரியின் சிவா ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கி னார். பின்னர், 8 ஆவது பட்டாலியனின் அனைத்து அதிகாரி கள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டினார்.

நூறு நாள் வேலை வழங்குவதில் சாதிப் பாகுபாடு பார்க்கும் அலுவலர்கள் வி.தொ.ச முற்றுகைப் போராட்டம்

கரூர், செப்.26 -  கரூரில் சாதியப்  பாகுபாடு பார்த்து நூறு நாள்  வேலை வழங்காமல், அடை யாள அட்டையை பறித்து வைத்துக் கொண்டு, அருந்ததியர் மக்களை அரசு அதிகாரிகள் வஞ்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாதியப் பாகுபாட்டை கண் டித்து விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர்  போராட்டம்  நடத்தினர். கரூர் ஒன்றியம் வேட்ட மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப் புறங்களில் வசிக் கும் அருந்ததியர் மக்களுக்கு  மட்டும் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் (நூறு நாள் வேலை) கடந்த மூன்று  மாதங்களாக வேலை கொடுக் காமலும், அவர்களது அடை யாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டு, தர  மறுத்தும் அரசு அலுவ லர்கள் வஞ்சித்து வருகின்ற னர். இதுகுறித்து அருந்ததி யர் சமூக மக்கள் கேட்ட போது, எந்த விபரமும் சொல் லாமல், அவர்களை அலைக் கழித்துள்ளனர். ஆனால்  சாதி ஆதிக்க வெறியர் களுக்கு மட்டும் தொடர்ந்து நூறுநாள் வேலையை அரசு  அலுவலர்கள் வழங்கியுள்ள னர். சாதியப் பாகுபாட்டுடன் அரசு அலுவலர்கள் செயல் படுவதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண் டிக்கிறது.  அருந்ததியர் சமூக மக்க ளிடமிருந்து வாங்கி வைத் துள்ள அடையாள அட்டை களை உடனே  வழங்க வேண்டும். நூறுநாள் வேலை  வழங்குவதில் உள்ள சாதிய பாகுபாட்டை அரசு அலுவ லர்கள் கைவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்ச னையில்  உரிய விசாரணை  மேற்கொண்டு, சம்பந்தப் பட்ட அரசு அலுவலர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் கரூர்  ஒன்றியக் குழு சார்பில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் பூரணம் உட்பட நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன டியாக அடையாள அட்டை களை பயனாளிகளுக்கு திருப்பித் தருவதாகவும், வரும் வியாழக்கிழமை முதல் அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்கப்ப டும் என கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.

இலவச வீட்டு மனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு

பாபநாசம், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவல கத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திரு நங்கை சுபஸ்ரீ தலைமையில் திருநங்கைகள் கோட்டாட்சி யரிடம் மனு அளித்தனர்.  அம்மனுவில், கருப்பூர் மற்றும் மணலூரில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டின் உரிமையா ளர் திடீரென எங்களை வீட்டை காலி செய்யுமாறு கூறினால், எங்களுக்கு எங்கு போவது என தெரியாத நிலை  உள்ளது. குடும்பத்தினரும் எங்களை சேர்த்துக் கொள்ள வில்லை. இதனால் எங்களுக்கு இலவச வீட்டு மனைப்  பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை  மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவிளையாட்டம்  மக்கள் தொடர்பு முகாம்

மயிலாடுதுறை, செப்.26 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் செவ்வாயன்று மக்கள்  தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 122 பயனா ளிகளுக்கு ரூ.27.82 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட  உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகி யோர் வழங்கினர். திருவிளையாட்டம், ஈச்சங்குடி, எரவாஞ்சேரி, கொத்தங் குடி, நரசிங்கநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் திட்ட விளக்க கண்காட்சியும் நடைபெற்றது.

புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

பாபநாசம், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வீரமாங்குடியில் குழந் தைநேய பள்ளி உட்கட் டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ்  ரூ.30.13 லட்சம் மதிப்பீட் டில், ஊராட்சி ஒன்றியத்  தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப் பறைகள் கட்டப்பட்டன. இதனை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில்  மாவட்டக் கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப்.26-  தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தஞ்சாவூர் மாநகரம் சார் பில் தந்தை பெரியார் 145  ஆவது பிறந்த நாள்  விழா, சரோஜ் நினைவ கத்தில் திங்களன்று நடைபெற்றது.  மாநகரத் தலைவர் பிம்பம் சாகுல் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் க.முரளி வர வேற்றார். தஞ்சை மாவட் டச் செயலாளர் இரா. விஜயகுமார், மாநில  துணைப் பொதுச் செய லாளர் களப்பிரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசி னர். பேராசிரியர் வீ.அரசு சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் வல்லம்  தாஜூபால், சீலெஸ்ரீ ஆகி யோர் கவிதை வாசித்த னர். சா.தமிழ்வாணன், சி. கௌரிசங்கர், பொருளா ளர் த.சுத்தானந்தன் பங்கேற்ற இசைநிகழ்ச்சி நடைபெற்றது. வெ. திருநாவுக்கரசு நன்றி கூறி னார். 

மருத்துவ முகாம்

பொன்னமராவதி, செப்.26 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவி களுக்கு மருத்துவ முகாம்  நடைபெற்றது. முகாமில் பொன்னமராவதி மருத்துவ அலுவலர் சுகன்யா, பல் மருத்து வர் லெட்சுமி பிரியா ஆகி யோர், சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மருந்தாளு நர்கள், இடைநிலை செவி லியர்கள், ஆய்வக நுட்ப நர் சங்கரேஸ்வரி, பெண்கள் நல தன்னார் வலர்கள் கலந்து கொண் டனர். சுகாதார ஆய்வா ளர் தியாகராஜன் விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

கிராம சபை கூட்டம்

கரூர், செப்.26 - அக்டோபர் 2 காந்தி  ஜெயந்தியை முன் னிட்டு, கரூர் மாவட்டத் தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற  உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராம சபை  கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண் டும் என மாவட்ட ஆட்சி யர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.    

முன் திட்டமிடல் கூட்டம்

அறந்தாங்கி, செப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வளமையத்தில் எண்ணும் எழுத்தும் 2 ஆம் பருவத்திற்கான 4 மற்றும் 5 ஆம் வகுப்பு முன் திட்டமிடல், கற்றல்,  கற்பித்தல் உபகர ணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் நடை பெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித் தார்.

சூட்கேசில் மறைத்து கடத்த இருந்த  31 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

கும்பகோணம், செப்.26 - சூட்கேசில் மறைத்து வைத்து சென்னைக்கு கடத்தப்பட இருந்த 31 கிலோ சந்தன மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல்  செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சந்தே கத்திற்கு இடமான வகையில், பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப் போது அவரது சூட்கேசை சோதனை யிட்டதில், எட்டு சந்தன மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் (65) என்பதும், பாபநாசம் தாலுகாவில் உள்ள பட்டா நிலத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி, அதனை விற்பனைக்காக சென்னைக்கு கொண்டு செல்வதும் தெரிய  வந்தது. இதுகுறித்து போலீசார் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், கும்பகோணம் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர், ராம்குமாரை கைது செய்து, அவர் கொண்டு வந்த 8 துண்டு களாக இருந்த 31 கிலோ சந்தன கட்டை களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என  கூறப்படுகிறது.

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?

தஞ்சாவூர், செப். 26 -  தமிழக அரசால் 2022-2023 ஆம் ஆண்டு  சம்பா பருவத்துக்காக அறிவிக்கப்பட்ட தில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை எவ்வளவு என  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், செவ்வாய்க்கிழமை விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஈஸ்வரன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலா ளர் நா.உமாமகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், விவசாயி கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கோரிக்கை  கூட்டத்தில் விவசாயிகள் பேசுகை யில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை,  சம்பா பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வரு கின்றன. எனவே தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற முடி யும். பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோன குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த  2022-2023 சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு  செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.  இதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எவ்வளவு தொகை என்பதை வெளிப்ப டையாக அறிவித்து, உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும். காப்பீடு நிறு வனங்கள் எந்த அடிப்படையில் மகசூல் இழப்பை கணக்கீடு செய்கிறது மற்றும் விவசாயிகள் முன்னிலையில் சோதனை அறுவடை செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக  அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொ கையை தீபாவளி பண்டிகைக்குள் வழங்க  வேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா  சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை  நவம்பர் மாதத்திலேயே தொடங்க வேண் டும். அங்கு எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். இலவச மின் இணைப்புக்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னரும் இணைப்பு வழங்காமல், தஞ்சா வூர் மாவட்டத்தில் காலம் தாழ்த்தி வரு வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற னர். எனவே மின் இணைப்பை உடனே வழங்க வேண்டும். தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் அருகே பாழடைந்த நிலையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை புதுப்பித்து தர வேண்டும். வரும் கார்த்திகை மாதத்தில் கடலைப் பருவம் தொடங்க உள்ளதால், வேளாண் மைத் துறை மூலம் தரமான கடலை விதையை வழங்க வேண்டும். திருமண்டங் குடியில் தொடர்ந்து போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண் டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.