பாபநாசம், ஏப்.13 - இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் சுதா, மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தான் போட்டியிடும் கைச் சின்னத்திற்கு ஆதரவாக தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே மருத்துவ குடி, கல்விகுடி, கொந்தகை, அதியம்ப நல்லூர், கீழமாஞ்சேரி, தேவனோடை, மேலமாஞ்சேரி, மண்ணிக் கரையூர், அண்ணா நகர், எடக்குடி, திருவைக்காவூர், பட்டவர்த்தி, தாவாரங்குடி, துரும்பூர், ஆதனூர், நரசிம்மபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி, திருமண்டங்குடி, உமை யாள்புரம் காலனி, ராமானுஜபுரம் காலனி, கோயில் பத்து, சத்தியமங்கலம், வாழ்க்கை, நக்கம்பாடி, உம்பளாப் பாடி, கபிஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் வாக்குச் சேகரித்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி., காங் மாவட்டத் தலைவர் லோகநாதன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சுமதி, பெரு மாள் கோயில் ஊராட்சித் தலைவர் ராஜேந் திரன், சிறுபான்மையினர் நல அணி மாவட்ட நிர்வாகி அனிபா, சுற்றுச் சூழல் அணி மாவட்ட நிர்வாகி கார்த்தி உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.