districts

img

அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு

அறந்தாங்கி, செப். 4 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோ யிலை அடுத்த பெருநாவலூ ரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ரமேஷ்  மற்றும் பழனிதுரை தலை மையில் மரக்கன்றுகள் நடவு  செய்யப்பட்டன.  நிகழ்ச்சியில் துறை தலை வர்கள், கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கல்லூரி  வளாகத்தில் மா, பூவரசு, வேங்கை, புங்கை போன்ற  மரங்களை நடவு செய்தனர். மேலும் கல்லூரி  வளாகத்தில் குப்பைகள், முட்செடிகள், புல் பூண்டு களை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.