districts

img

நூறு நாள் வேலையில் 3 மாத ஊதியத்தை வழங்குக!

விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்  கும்பகோணம், பிப்.27 - மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த  தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பள பணம் நிலுவையில் உள்ளதை உடனே வழங்க கோரி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முறையீடு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கும்பகோணம் ஒன்றியச் செயலா ளர் ஜெ.செந்தில் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஆர். நாகமுத்து, தட்சிணாமூர்த்தி, சம்சுதீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரி யப்பன், மாநிலக் குழு உறுப்பினர் சி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு ஆகியோர் விளக்க உரை யாற்றினர். சிபிஎம் தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், கும்ப கோணம் ஒன்றியச் செயலாளர் கணே சன், திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் சாமிகண்ணு, கும்பகோ ணம் ஒன்றியச் செயலாளர் ராஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூறு நாள் வேலை செய்த மூன்று  மாத நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகளை உடனே வழங்கிட வேண்டும். வேலை அட்டை வைத்து உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.4  லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும். சட்டக் கூலி ரூ.319-ஐ முறையாக வழங்கி, ஆண்டுக்கு 200 நாள் வேலை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், கும்பகோணம் கோட்ட  சார் ஆட்சியரின் நேர்முக உதவி யாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.  பாபநாசம் நூறு நாள் வேலையில் வேலை பளுவை உயர்த்தியதற்கும், கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்த பணிக்கு சம்பளம் வழங்கப் படாமல் இருப்பதையும் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த மேல கபிஸ்தலம் ஊராட்சி  மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.  தகவலறிந்த பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் (பொ) சகாய அன்பரசு, ஒன்றியப் பொறியாளர் சரவணன், ஊராட்சி செயலாளர் அழகேசன் ஆகியோர் வந்து, முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,  விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று, சம்பள பணத்தை வழங்க ஆவன  செய்வதாக கூறினர். இதன்பேரில்  முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது.