தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) கூத்தரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.