districts

img

பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஏற்பாடு

பாபநாசம், அக்.1 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சோஷி யல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33-வது ஆண்டு  பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் தேவரா ஜன் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் உஷாராணி  வரவேற்றார். துணைத் தலைவர் புவனேஸ்வரி முன்னிலை  வகித்தார்.  சங்கச் செயலர் கண்ணதாசன் 2022-2023 நிதியாண்டின் வரவு-செலவு கணக்கு மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார்.  வழக்கறிஞர் கண்ணன் சட்டம் குறித்துப் பேசினார். இதில்  அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்குவது, மகளிர் குழு  பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி மற்றும் நிர்வாக  மேலாண்மை பயிற்சி, இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் சிவக்குமார்  நன்றி கூறினார்.