districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய அளவில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காலிப் பணியிடங்களை உடனே  நிரப்ப வேண்டும். மின் வாரியத்தை  பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை கால தாமதமின்றி உடனே வழங்க வேண் டும். அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி ரூ.5 லட்சத்தை மின்  வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும். மின் விபத்தில் உயிரிழக்கும் மின்  வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை, வாரிய உத்தரவை வெளியிட வேண்டும். கேங்மேன் ஊர் மாற்றம், கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்புப் போ ராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக திருச்சி ராப்பள்ளி,

தஞ்சாவூர்,

திருவாரூர்,  புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டி னம் ஆகிய டெல்டா மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடந்த போராட் டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன்  தலைமை வகித்தார். போராட் டத்தை மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ், வட்ட  துணைத்தலைவர் எஸ்.கே.செல்வ ராஜ் ஆகியோர் பேசினர். இதில் கோட்ட நிர்வாகிகள் உள்பட 200-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். திட்டச் செய லாளர் பி.காணிக்கை ராஜ் கோரிக் கைகளை முன்மொழிந்து பேசினார்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் துவக்க உரையாற்றி னார்.  இதில், மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.கண்ணன், சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர்கள் கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் ஜி. மணிமாறன், ஓய்வு பெற்றோர் சங்கம் எம்.முனியாண்டி, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் விஜயலட்சுமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்டத் தலைவர்கள், கோட்டச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.  சிஐடியு மாவட்ட துணை தலை வர் து.கோவிந்தராஜு நிறைவுரை யாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார்.

திருவாரூர்

திருவாரூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு அமைப்பின் திட்டத் தலைவர்  எஸ்.சகாயராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, அமைப்பின் தஞ்சை மண்டல செயலாளர்  எஸ்.ராஜாராமன், திட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட பொரு ளாளர் ஜி.ஆர்.முகேஷ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் போராட் டத்தை விளக்கி கண்டன உரை யாற்றினர். திருவாரூர் கோட்ட செய லாளர் கே.வினோத், மன்னார்குடி  கோட்ட செயலாளர் ஜி.வீரபாண்டி யன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வா கிகள், ஊழியர்கள் கலந்து கொண்ட னர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் வட்டச் செயலாளர் கு.நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் மற்றும் சங்க நிர்வாகிகள் பேசினர். டி.விஜயகுமார் நன்றி கூறினார். கரூர்  கரூர் மண்டல குழு சார்பில்  கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை செயலாளர் துரை  வரவேற்றுப் பேசினர். சிஐடியு கரூர்  மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் காத்திருப்பு போராட்டத்தை  துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் கரூர் மண்டல செய லாளர் கே.தனபால், டிஎன்பிஇஓ சங்க மாநிலச் செயலாளர் ஜி.கோ பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஏ.சௌந்தர ராஜன் ஆகியோர் பேசினர். நாமக்கல் மாவட்ட பொருளாளர் கே.முருகேசன் நன்றி கூறினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் கோட்ட அலுவ லகத்தின் முன்பு திட்டத் தலைவர் என்.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.தங்க மணி கண்டன உரையாற்றினார்.